இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 ஜூன், 2012

தமிழகத்தின் இன்றைய நிலைமை

  தமிழக முதல்வர் திருமதி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாட்டில் மின் பற்றாகுறை முழுவதுமாக குறைக்கபட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் மீண்டும் 8 மணி நேர மின் தொடங்கிஉள்ளது......

வியாழன், 15 செப்டம்பர், 2011

மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று

மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று

நண்பர்களே நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம். இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் ஆனால் இந்தியாவில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் திருட்டு காப்பி எடுத்துதான் உபயோகிக்கிறார்கள். இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்றவைகளை உருவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.
மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளை உபயோகிக்க வெறும் 256எம்பி ராம் இருந்தால் போதும் பென்டியம் 3 சிஸ்டம் போதுமானது.
இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே.
உபயோகித்து பாருங்கள் உண்மை புரியும்...இப்படிக்கு உங்கள் நண்பன்...

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

முயன்றால் முடியும்

வெற்றி பெற்றவர்வகளெல்லாம் என்ன குணங்களால் சாதனை படைத் தவர்கள் என்று தெரிந்து கொண்டால் நாமும் அதே குணங்களைப் பின்பற்றலாம். அதே வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

அதே போலத்தான் ஒரு நாட்டின் விஷயமும், ஜப்பானும் அமெரிக்காவும் ஸ்வீடனும் எப்படி முன்னேறி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு நாமும் அந்த சில அணுகுமுறைகளை திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

முதலில் நமக்கு படிக்கும் ஆர்வம், தெரிந்து கொள்ளும் துடிப்பு அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்று புரிந்து கொள்ளும் கூர்மை வேண்டும்.

அடுத்ததாக அந்த குணங்களை நாம் நம் வாழ்வில் நமக்கேற்ற சூழ்நிலையில் எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.

வெற்றி தரும் குணங்களைப் பற்றிய சிந்தனை, சாதனை புரிந்தவர்களின் தன்மை களைப் பற்றிய சிந்தனை, சாதனை புரிந்தவர் களின் தன்மைகளைப் பற்றிய நினைவுகள் சதா நம் மனதில் இருக்க வேண்டும். இதைத்தான் (Awareness) விழிப்புணர்வு என்று சொல்வார்கள்.

விழிப்புணர்வுக்கு முக்கியமான ஐந்து குணங்களை மனோபாவங்களை நாம் குறிப்பிட முடியும். இவைதான் அவர்களது சாதனைகளுக்கு அடித்தளமாக இருந்திருக்கின்றன.

1. பெரிய விஷயங்களில் ஈடுபாடு

2. மாற்றங்களை உண்டாக்குதல்

3. தோல்வியை சமாளிக்கும் இயல்பு

4. எது முக்கியம் என்ற தெளிவு

5. வாழ்வில் ஒரு நிறைவு

மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கப்பலோட்டிய சிதம்பரனாரை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தை நிறுவிய திரு. ஏக்நாத்ரானடே அவர்களை நினைத்துப் பாருங்கள் அல்லது ஒரு பெரிய ஏஜென்சி வியாபாரம் மட்டுமே செய்த பெருந்தொழில் அனுபமில்லாத ஸ்பிக் உரத் தொழிற்சாலையை நிறுவிய எம். ஏ சிதம்பரத்தை எண்ணிப்பாருங்கள்.

இவர்கள் பெரும்பாலும் அதிகம் பேசமாட்டார்கள் ஆனால் உயர்வு பெறுவதற் குரிய எண்ணங்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும்.

அவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். எடுத்த லட்சியமும் அதிலுள்ள ஈடுபாடும் அந்த லட்சியத்தின் கனவும் பெருமையும் இவர்களையும் உயர்த்தி விடுகிறது இதுதான் லட்சியம் தரும் வலிமை.

மனித சமுதாயம் செல்ல வேண்டிய திசையை இவர்கள் சரியாக கணிக்கிறார்கள்.

பலருடைய வாழ்வுமே திட்டமிட்டோ அல்லது எதிர்பாராமலோ மாற்றங்கள் நிகழ்கின்றன.

சாதனை புரிபவர்கள் அந்த மாற்றங்களை விரும்பி வரவேற்று அவற்றைப் பயனுள்ளவை களாக மாற்றிக் கொள்கிறார்கள். தடைக் கல்லைப் படிக்கல்லாகப் பயன்படுத்தி உயர்கிறார்கள்.

தோல்வி இல்லாத வாழ்க்கையே இல்லை. தோல்வி, ஏமாற்றம் எல்லாம் ஏற்படுவது சகஜம்தான்.

ஆனால் தோல்வியை வெற்றி பெற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள். வெற்றிப் பாதையைக் கண்டவர்கள் தாங்கள் தோற்றதாக அதிகம் கருதுவதில்லை. நாமும் வெற்றி பெற்றவர்களாக மாறலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.